வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் வீடியோவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.