பிரதமர் மோடி இந்திய நலன்களைப் பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர் என ரஷ்ய அதிபர் புதின் பாராட்டி உள்ளார்.
சோச்சி நகரில் ரஷ்ய நிபுணர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவில் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியா மற்றும் சீனா மீது வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியைத் தழுவும் எனவும் கூறினார்.
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எந்தப் பிரச்னையோ, பதற்றமோ ஏற்பட்டது இல்லை என்றும், பிரதமர் மோடி தனது நண்பர், அவர் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்கமாட்டார் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு, அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்த புதின், போர்க்களத்தில் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.