செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாமண்டூரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெப்ஸி குளிர்பான நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் நிலையில், நூறு பேரை மட்டும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனத்தின் இந்தச் செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஊழியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், பெப்சி ஆலையின் செயல் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் விதமாக உள்ளது எனவும், அராஜக போக்கில் செயல்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.