இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் முடிவை ஐ.நா மற்றும் உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்று, இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனையடுத்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக வர்ணித்துள்ளன.
அதன்படி பிணைக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் கூறியுள்ளார்.
இதே போல இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் முடிவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் வரவேற்றுள்ளார்.