தவெக பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரம் பகுதியில் தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா, இயக்குநர் ரவிவர்மா, விசாரணை அதிகாரி லிஸ்டர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வேலுச்சாமிபுரத்தில் உயிரிழந்த 2 பேரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வரும் நபரை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உடனிருந்தனர்.