ஈரோடு மாவட்டம் பவானி அருகே திமுக பிரமுகர், விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கல்பாவி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வெங்கடேசன் மறைந்ததால் உறவினர் புவனேஷ் என்பவர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகப் புவனேஷ், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் திமுக பிரமுகர் சரவணன் தனது 55 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கமலா என்பவரும் புகார் மனு அளித்துள்ளார்.