கரூர் தவெக பரப்புரையில் 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயங்குவது ஏன் எனப் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில், 2026 பேரவை தேர்தல் குறித்தும் பரப்புரையை தொடங்குவது பற்றியும் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின், எஸ்.வி.ஸ்ரீநாத் தயாரிப்பில் உருவான “தாமரை தேசமே” என்ற பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.