ஜப்பானின் முதல் பெண் பிரதமராக முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததுதால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். கட்சியின் 295 எம்.பி.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள்மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே தகைச்சிக்கும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்ஜுமிக்கும் இடையிலான உள்கட்சி வாக்கெடுப்பில், சனே தகைச்சி வெற்றி பெற்றார்.
இதன் மூலம், ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே தகைச்சி பெற வாய்ப்புகள் உள்ளன.