உக்ரைனின் சுமி மாகாணத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பயணிகள் ரயில் கடும் சேதமடைந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஆயிரத்து 300 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிப்பதுடன் உதவிகளையும் செய்து வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதில் 30 பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.