கோவை மாவட்டம், சூலூர் அருகே பிரதமரின் சூரிய மின் சக்தி திட்டம்குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம் சார்பில் அரசூர் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமில், சூரிய மின் சக்தி திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது.
அப்போது பேசிய மின்வாரிய அதிகாரிகள் இந்தத் திட்டத்தில் மத்திய அரசு வழங்கக்கூடிய மானியத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது குறித்து அறிந்த வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெய்ஹிந்த் முருகேஷ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.