சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஒரு ஞானகுரு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மொழி, மதம், நாடு என எல்லாவித வரையறைகளையும் கடந்து, அன்பால் மட்டுமே ஆண்டவரை வழிபட வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்குகின்ற ஜீவகாருண்யம் என்ற அன்பான வழிபாடே, கடவுளின் அருளை பெறும் மார்க்கம் எனும் மாபெரும் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் வள்ளலார் என தெரிவித்துள்ளார்.
சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு, வள்ளலார் ஒரு ஞானகுரு! இன்றைய அவரது அவதார தினத்தில், வள்ளலாரை போற்றி வணங்கி, அவர் காட்டிய வழியில் நடப்போம், அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என அவர் கூறியுள்ளார்.