கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதார இல்லத்தில் 203வது பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அணையா தீபம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பூஜைப் பொருட்களுடன் ஊர்வலமாக வந்த சன்மார்க்க அன்பர்கள், வள்ளலார் இல்லத்தின் முன்புள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர், தொட்டிலில் கிடத்தி வைக்கப்பட்ட வள்ளலாரின் குழந்தை வடிவ சிலைக்கு மலர் தூவி வணங்கினர். இந்த நிகழ்வில் சன்மார்க்க அன்பர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.