சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த பட்டாசு கடையில், காலை வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறிய நிலையில், அருகில் இருந்த குடோனிலும் தீ பரவியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒருமணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிவகாசி – சாத்தூர் நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.