ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே பயணித்தபோது பெட்டிகளுக்கு அடியிலிருந்து புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்து ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்ற ரயில்வே துறையினர் மின்மோட்டாரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டது.