சென்னையில் வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 880 ரூபாய் உயர்ந்து 88 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் 110 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெல்ளி ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.