உண்மை செய்திகளை முந்தித் தரும் தமிழ் ஜனம் டிவியை தடை செய்யத் திமுக அரசுக்கு அருகதை இல்லை எனப் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், திமுக ஸ்டாலின் அரசு நீதி, நேர்மை, உண்மை என்று பாகுபாடற்ற உண்மை செய்திகளை முந்தித் தரும் தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய எந்த அருகதையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
2ஜி ஊழல் வழக்கில் இருந்து இன்னும் விடுபடாத டிவியை நடத்துவதாக விமர்சித்துள்ள அவர், தமிழ் ஜனம் டிவியை முடக்க நினைத்தால் அது எரியும் நெருப்பை பஞ்சு மெத்தையை போட்டு முடக்கலாம் என்பதை போன்றது எனவும் கூறியுள்ளார்.