சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாமனாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
காடையாம்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் மகேஸ்வரிக்கும் மயில்சாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ஆண் குழந்தை இல்லாததால் மகேஸ்வரியிடம் மயில்சாமி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் மகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில் அங்கு வந்த மயில்சாமி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்ட மாமானார் பழனிசாமியை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மயில்சாமியை கைது செய்தனர்.