சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மையில் கடல்வழியாகக் காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் இஸ்ரேலிய படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு சிலரை நாடு கடத்தினர்.
இந்நிலையில் தன்பெர்க் இஸ்ரேலியர்களால் துன்புறுத்தப்படுவதை நேரில் பார்த்ததாக நாடு கடத்தப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த சமூகநல செயற்பாட்டாளார் ஹஸ்வானி ஹெல்மி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விண்ட்ஃபீல்ட் பீவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கிரட்டாவை இஸ்ரேலிய படைகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது. அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்துமிடமாறு வற்புறுத்தியதாகவும், அத்துடன் மூட்டைப்பூச்சிகள் நிறைந்த அறையில் கிரெட்டாவை அடைத்து வைத்துள்ளதாகவும் நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் காவலில் இருக்கும் கிரெட்டா தன்பெர்க் இன்னும் விடுவிக்கப்படவில்லையென கூறப்படுகிறது.