உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பழமையான கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மார்பகப் புற்றுநோய் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்க வலியுறுத்தியும் பிங்க் வேவ் என்ற தலைப்பில் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
டோபோலினோ 500B, செவர்லே க்பீடன், ப்ளீட்மாஸ்டர் உள்ளிட்ட பழமையான கார்கள் சாலைகளில் அணிவகுத்து சென்றன.