ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் திரும்பும் திசையெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
பந்திப்போராவில் உள்ள ரஸ்தான் டாப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.
இவை சுற்றுலாப் பயணிகளையும், இயற்கை ஆர்வலர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அங்கு நிலவும் ரம்மியமான இயற்கை சூழல் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதேபோல் குல்மார்க் பகுதியிலும் பனிப் பொழிவு வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.