தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் சமந்தா மும்பையில் புதியதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
முன்னணி நடிகையான சமந்தா கடைசியாகத் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிட்னஸிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் சமந்தாவுக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருவதால், அவர் இப்போது மும்பையிலேயே அதிகமாகக் காணப்படுகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீட்டின் வாசலின் புகைப்படத்தைப் பதிவிட்டு, புதிய தொடக்கம் எனச் சமந்தா குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவர் புதிதாக வீடு வாங்கியிருப்பதாகக் கூறி வருகின்றனர்.