டிரம்ப் பேச்சை மீறிக் காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் பலியாகினர்.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.
அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார். இந்நிலையில் டிரம்ப்பின் பேச்சை மீறிக் காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் உதவி பொருட்களுக்காகக் காத்திருந்த இருவர் உட்பட 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.