டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கர்பா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவராத்திரி திருவிழா நிறைவடைந்த பின்னரும் டெல்லியில் இன்னும் கர்பா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியின் பான்சேரா பூங்காவில் நடைபெற்ற வண்ணமயமான கர்பா நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா மற்றும் துணை ஆளுநர் வி.கே. சக்சேனா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
அப்போது, முதலமைச்சர் ரேகாகுப்தா மற்றும் துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் பெண்களுடன் இணைந்து கர்பா நடனம் ஆடினர். இதுதொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.