நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஐ கடந்தது.
கிழக்கு நேபாளத்தின் பல இடங்களில் சனிக்கிழமை இரவு முதல் பருவ மழை கொட்டித் தீர்த்து வருவதால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழையால், பாக்மதி, திரிசூலி, கிழக்கு ராப்தி, லால்பகையா மற்றும் கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 52-ஐ கடந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.