மத்திய அரசின் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், மத்திய அரசின் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலயுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி சேலம் கோட்டை மைதானத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திராளனோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.