போதைப்பொருள் மாஃபியா, மணல் கொள்ளை மாஃபியா, கடத்தல் மாஃபியா கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் பெங்களூருவில் பஞ்சர் மாஃபியா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
பெங்களூருவின் நெலமங்களா சாலையில் சுமார் ஒன்றரை கிலோ ஆணிகள் சிதறிக் கிடந்தன.
ஆணிகளை வீசிச் சென்ற கும்பல் வாகனங்கள் பஞ்சர் ஆவதற்காக அருகிலேயே காத்திருக்கின்றனர்.
பஞ்சர் ஆனவுடன் உடனடியாக அங்கு வந்து பழுதை சரி செய்து அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடக்கும் ஆணிகளை காந்தம் மூலம் ஒருவர் அகற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேநேரம் ஆணியில் சிக்கியவுடன் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பஞ்சர் மாஃபியா கும்பலிடம் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் சாலையோரங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.