கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்துச் செல்லும் மிகப்பெரிய கும்பல் இங்கிலாந்தில் சிக்கியுள்ளது.
லண்டனில் கடந்தாண்டு மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
பைக் மற்றும் சைக்கிளில் வரும் திருட்டு கும்பல், சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன்களை பறித்துவிட்டு நொடியில் தப்பிச் சென்றுவிடுவர்.
புதிய ஐபோன்களை எடுத்துச் செல்லும் டெலிவரி வாகனங்களைக் குறிவைத்தும் இந்தக் கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் ஆபரேஷன் எக்கோஸ்டீப் என்ற நடவடிக்கையை லண்டன் போலீசார் மேற்கொண்டனர்.
இந்நிலையில் செல்போன் திருட்டு கும்பலைச் சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில் இதுவரை திருடப்பட்ட செல்போன்களில் 40 ஆயிரம் செல்போன்களை சீனாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.