அமெரிக்காவில் அவசர மருத்துவ சேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பலர் காயமடைந்தனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமெண்டோ நகரின் நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இந்தச் விபத்தில் பலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் ஹெலிகாப்டரில் சிக்கியதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவினர்.
ஹெலிகாப்டரானது, மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
தற்போது விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.