வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்ய எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி!
Jul 31, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்ய எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி!

Manikandan by Manikandan
Mar 16, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்காலிக நடவடிக்கையாக கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் எண்ணெயை வாங்கினால் வரி விதிக்கப்படும் என்று முன்பு கூறிய அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் மீது நடத்திவரும் போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார் மற்றும் சவூதியில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளையும் ஈரான் தாக்கியுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு கிட்டத்தட்ட 120 டாலரை எட்டியது. இது போருக்கு முந்தைய அளவை விட சுமார் 35 சதவீதம் அதிகமாகும்.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிசக்தியை பெரிதும் நம்பியுள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தற்காலிகமாக இந்தியாவை சுமார் ஒரு மாதத்துக்கு மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதியளித்த அமெரிக்கா, இப்போது மற்ற நாடுகளுக்கும் இந்த அனுமதியை வழங்கியுள்ளது..

உலகளாவிய எரிசக்திச் சந்தையில் எண்ணெய் விநியோகத்தின் வரம்பை விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

கடல் போக்குவரத்தில் உள்ள ரஷ்ய எண்ணெய்க்கு மட்டுமே இந்த அனுமதி பொருந்தும் என்று கூறியுள்ள ஸ்காட் பெசென்ட், தனது எரிசக்தி வருவாயில் பெரும்பகுதியை, எண்ணெய் எடுக்கப்படும் இடத்திலேயே விதிக்கப்படும் வரிகள் மூலமாகவே ரஷ்யா ஈட்டுவதால் ரஷ்யாவுக்கு எந்த பெரிய லாபமும் இருக்காது என்றும் விவரித்துள்ளார்.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 6 பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை ரஷ்யா பெற்றுள்ளதாக மைனேயின் செனட்டர் அங்கஸ் கிங் அமெரிக்க இராணுவத் தளபதிகளிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவரான பிறகு மொஜ்தபா கொமேனி, வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய அதிபர் ட்ரம்ப், புதின் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: americaDonald Trumptamil janam
ShareTweetSendShare
Previous Post

 கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் – சிறப்பு கட்டுரை!

Next Post

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies