கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் - சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் – சிறப்பு கட்டுரை!

Manikandan by Manikandan
Mar 16, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் மூழ்கடிக்கப் பட்டதற்கும் இந்தியாவுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை உண்மையில் இந்தியா ஈரானுக்கு உதவி செய்துள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் IRIS Dena போர்ட் கப்பல் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

விசாகப்பட்டினத்தில் பல்முனை கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு ஈரான் போர்க்கப்பலான ‘IRIS Dena’ வந்திருந்தது.

கடந்த மார்ச் 4ம் தேதி பயிற்சி முடிந்து நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கரையோரத்தில் GALLE-வுக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் எதிர்பாராத தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ‘டார்பிடோ’ தாக்குதலில் ‘IRIS Dena’ வில் இருந்த ஈரான் கடற்படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஈரான் போர்ச் சூழலில் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவில் பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவின் கடல்சார் அதிகார வரம்புக்குள் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இருப்பதாக மத்திய அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அரசு உண்மையாகவே பெரிதும் உதவியதாக கூறிய அவர், துரதிர்ஷ்டவசமாக, வேறு சில நாடுகள் ஒத்துழைக்க மறுத்துவிட்டன என்றும் கூறியுள்ளார்.

மேலும்,எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் ஈரான் விட்டுவிடுவதில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இதே மாநாட்டில் பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே ‘IRIS Dena’ தாக்குதலுக்குள்ளான சம்பவம், சர்வதேச சட்டம், கடல்சார் விதிமுறைகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய சக்திகளின் நடத்தை பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்புவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் IRIS Dena-வை தனது கடல் எல்லை வரை பத்திரமாக வழியனுப்பியது, IRIS Lavan-க்கு அடைக்கலம் கொடுத்தது என ஈரான் போர்க்கப்பல்களுக்கு இந்தியா தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தது என்பதையும் ஈரானின் தூதரே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியதன் மூலம் இந்திய அரசியலில் எழுந்த தேவையில்லாத விவாதங்களுக்கு ஈரான் தூதரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags: IndiaIrantamil janamIRIS DenaMIDDLE EAST WAR
ShareTweetSendShare
Previous Post

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ? – சிறப்பு கட்டுரை!

Next Post

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்ய எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies