திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
புரட்டாசி பவுர்ணமியை ஒட்டி நிறை மணி காட்சி விழா தொடங்கியது. இதற்காகக் கோயில் கருவறை மற்றும் அதன் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மூலிகை தாவரங்கள் உட்பட பலவிதமான பொருட்கள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது.
மழை பெய்து உலகம் செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும் நிறைமணி காட்சி விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.