ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில், அண்மையில் பெய்த புதிய பனிப்பொழிவு காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போத்தியது போல் மிகவும் அற்புதமாகக் காட்சியளிக்கிறது.
இந்த ரம்மியமான காட்சியை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் குல்மார்க்கிற்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மேற்கு இமயமலை பகுதிகளில், வழக்கத்தைவிட முன்னதாகவே இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகச் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.