குஜராத்தில் மாற்றுத் திறனாளிகள் கர்பா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவராத்திரி திருவிழா நிறைவடைந்த பின்னரும் வட மாநிலங்களில் இன்னும் கர்பா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் மாற்றுத் திறனாளிகளுக்காகச் சிறப்பு கர்பா நடன நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கர்பா நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.