அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிடத் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
2026சட்டப்பேரவை தேர்தலை ஒட்டித் தமிழப பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தநிலையில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடத் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
வரும் 12ம் தேதி தொடங்க உள்ள பாஜக தேர்தல் பிரசார தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு இருவரும் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.