அசாமின் முதல் பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1961 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் விமானத்தை இயக்குவதற்கான உரிமத்தை பெற்று விமானி ஆனார். தொடர்ந்து அந்த ஆண்டே அவர் போர்ஜரிலிருந்து, தேஸ்பூருக்கு தனி விமானத்தில் பயணித்துச் சாதனை படைத்தார்.
பயிற்சி விமானியாகப் பணியாற்றியபிறகு, வணிக விமானி உரிமம் பெறுவதற்கு அவர் மிகவும் கடினமாக உழைத்தார். ஆனால், அந்த உரிமத்தைப் பெறுவதற்கு முன்பே, அவருக்குத் திருமணம் ஆனதால் கணவருடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.
தற்போது 85 வயதான அவர், இங்கிலாந்தில் தனி விமானத்தில் பயணித்து அசத்தியுள்ளார். இந்த காட்சிகளைத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.