ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக NH44 தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் உதம்பூர், ராம்பன், பனிஹால் பகுதிகளில் பல இடங்கள் அடைக்கப்பட்டது.
மழையானது அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் சாலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்துப் பகுதிகளிலும் அடைப்புகள் அகற்றப்பட்ட பின்னரே போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.