சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.