சீனாவில் மலையேற்றம் செய்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள புகழ் பெற்ற நாமா மலையின் உச்சியில் மலையேற்ற குழுவினர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 31 வயதான ஹாங் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காகப் பாதுகாப்பு கயிற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதனால் நிலைதடுமாறி ஹாங், பனியில் சறுக்கியபடி மலையில் இருந்து விழுந்தார்.
சுமார் 200 மீட்டர் உயிரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அரசின் அனுமதியின்றி உரிய பாதுகாப்பு இல்லாமல் சென்றதால் விபத்து நேரிட்டதாகவும் இதுகுறித்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் ஹாங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.