பெங்களூருவில் சிறையில் உள்ள கைதி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் பிரபல ரவுடி ஸ்ரீனிவாசா என்பவர் கொலை வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஆப்பிள் மாலை அணிந்து கத்தியால் அவர் கேக்கினை வெட்ட சக கைதிகள் விசில் அடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் ஆளும் கர்நாடகா அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சிதைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் சிறை நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறியுள்ள அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.