பாரிஸ் பேஷன் ஷோவில் வயோலா டேவிஸ், கெண்டல் ஜென்னர் உள்ளிட்டோருடன் நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொண்டு புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த 2ஆம் தேதி பாரிசின் ஈபிள் டவர் அருகே லோரியல் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அமெரிக்க நடிகைகள் கெண்டல் ஜென்னர், வயோலா டேவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு ஒய்யாரமாக ரேம்ப் வாக் செய்தனர்.
இந்நிலையில் பேஷன் ஷோவில் தன்னுடன் பங்கேற்ற அழகிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதையில் தனது அன்பான லோரியல் பாரிஸ் குடும்பம் பிரகாசிப்பதாகக் கூறியுள்ளார்.