தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது.
துப்ரானில் இருந்து மேட்சாலுக்கு செல்ல பள்ளி வாகனம் யூ-டர் எடுத்தபோது, எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.
இந்த விபத்தில் சில மாணவ, மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், பெரிய அளவுக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.