சீனாவில் மாதந்தோறும் ஹேர்டை பயன்படுத்தி வந்த இளம்பெண் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுவா என்ற 20 வயது இளம்பெண் தனக்கு பிடித்த பிரபலத்தின் தலைமுடி வண்ணத்தை ஒத்துப்போகும் வகையில் ஹேர்டை பயன்படுத்தி வந்துள்ளார்.
மாதந்தோறும் தொடர்ந்து ஹேர்டை பயன்படுத்தி வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறு நீரக கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்கு அவர் பயன்படுத்திய ஹேர் டையே காரணமென்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஹேர்டைகளில் ஈயம் மற்றும் பாதரசம் உள்ளதாகவும், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இந்தச் சாயங்கள் புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.