பீகாரில் பிரபல நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாகூர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அலிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தலைவர்களான வினோத் தாவ்டே மற்றும் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை மைதிலி தாகூர் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவதை அவர் உறுதிபடுத்தவில்லை என்றாலும், அவர் அதனை மறுத்தும் பேசவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகாரின் எதிர்காலம்குறித்து பாஜக தலைவர்களிடம் விவாதித்ததாகவும், தனது சொந்த தொகுதியில் போட்டியிட ஆசை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்குத் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்யத் தான் உறுதியாக இருப்பதாகவும் மைதிலி தாகூர் ஹிண்ட் கொடுத்துள்ளார்.