2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரேட், ஜான் மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மின் சுற்றுகளில் உண்டாகும் குவாண்டம் மாற்றங்களைக் கண்டறிந்துள்ளனர். இது குவாண்டம் கணினி கண்டுபிடிப்புகளுக்குத் தொடக்கமாக அமைந்துள்ளதால் 3 பேருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.