ஒடிசாவில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஜ்பூர் மாவட்டம் கான்டியா பகுதியில் 55 வயதான சவுதாமினி என்பவர் துணி துவைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார்.
அப்போது ஆற்றில் சுற்றித் திரிந்த ராட்சத முதலை ஒன்று, சவுதாமினியை கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சவுதாமினியை காப்பாற்றுவதற்குள் அவரை இழுத்துக் கொண்டு முதலை நீருக்குள் மறைந்தது.
சமீபத்தில் ஒரு ஆட்டை முதலை இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதலையைப் பிடிக்கும் வரை ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.