உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவி இரவு நேரத்தில் நாகினி பாம்புபோல் மாறிப் பயமுறுத்துவதாகக் கணவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சீதாபூரை சேர்ந்த மீரஜ் என்பவர் ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த நசீமுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தொடங்கியது பிரச்னை.
இரவு நேரத்தில் நசீமுனின் நடவடிக்கை நாகினி பாம்புபோல் இருப்பதாகவும் தன்னைக் கடித்து அச்சுறுத்துவதாகவும் மீரஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நினைத்து மீரஜ் பேயோட்டியும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இந்நிலையில் மனைவியிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு மாவட்ட நீதிபதியிடம் மீரஜ் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாகப் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.