அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வீடு திரும்பினார்.
86 வயதான பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பிரச்னைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலையில் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு ஓய்வே கிடையாது என ராமதாஸ் பதிலளித்தார். கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ள ராமதாஸ், அதன் பின்னர் தைலாபுரம் இல்லத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.