வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கௌண்டன்ய மகாநதி ஆற்றில் பாலம் அமைத்துத்தரக்கோரி கிராம மக்கள் ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கால்வாய் பாலத்தின் மீது ஆபத்தான முறையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, கரையோர மக்களும் ஆற்றின் மறுபகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பாலம் அமைத்துத்தரக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.