தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே பிரத மந்திரி கிராம சாலை திட்டத்தில் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன்ராஜாப்பட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 4 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க கடந்த ஜூலை மாதம் டெண்டர் விடப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாத நிலையில், சாலை அமைக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் மூலம் போர்டு வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலை அமைக்கப்படாததால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.