“கோல்ட்ரிப்” இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் “கோல்ட்ரிப்” இருமல் மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. மத்தியப்பிரதேசத்தில் இந்த மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்தன.
விசாரணையில் இந்த மருந்தில் விஷ தன்மையுள்ள “டயெத்திலீன் கிளைக்கால் அதிகளவு கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் மருந்துகளின் தரம், குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விளக்கக் கேட்டு நிறுவனத்தின் வாயிலில் காஞ்சிபுரம் மருந்து கட்டுப்பாடுதுறை ஆய்வாளர் மணிமேகலை நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.